2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்! மத்திய இணையமைச்சர் தகவல் https://patrikai.com/madurai-aiims-work-will-conclude-in-2026-says-union-health-minister-bharati-pravin-pawar/ via @[email protected]
தருமபுரி: 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய குடும்பநலத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவின் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றின் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், வரும் 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து மக்கள்...
95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? நட்டாவுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி
https://patrikai.com/where-is-95-completed-madurai-aiims-building-members-of-parliament-questioned-to-jp-nadda/ via @[email protected]
#MaduraiAIIMS #Madurai #AIIMS #AIIMSMadurai @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதுபோல, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2நாள் பயணமாக தமிழ்நாட்டில் சுற்றுப்பணம் மேற்கொண்டார். அதன்படி, நேற்று மதுரை வந்த நட்டாவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலையம் அருகே...
எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
https://www.patrikai.com/harsh-wardhan-has-said-madurai-aiims-hospital-could-not-continue-operations-due-to-delays-in-signing/ #AIIMS #Madurai @[email protected] #maduraiaiims
புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்? என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார். மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி...