உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம்
நம்மில் பலரும் பைத்தான் மொழியில் விரல்களை எழுதி வருகிறோம். என்னைப் போல பைத்தான் மொழியில் புதியதான விஷயங்களை கற்றுக் கொள்பவர்களுக்கு சில சிக்கல்களும் உடன் சேர்ந்தே வரத்தான் செய்யும். புதியதாக ஏதாவது ஒரு நூலகத்தை (library) நிறுவ முனையும் போது, உங்கள் லிநெக்ஸ் கணினியின் முனையத்திலிருந்து , “பைத்தான் தொடர்புடைய கோப்புகளை உங்களால் நேரடியாக கணினியில் நிறுவ முடியாது” என்பது போன்ற ஒரு செய்தி காண்பிக்கப்படும்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் லினக்ஸ் கணினிகளின் முக்கியமான கோப்புகள் பலவும் பைத்தான் மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதே பைத்தான் மொழியில் வேறு நூலகங்களை நாம் நிறுவும் போது, இரண்டு நிரல்களுக்கும் இடையே இடைமுகம் ஏற்பட்டு ஒட்டுமொத்த லினக்ஸ் கணினியும் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், வேண்டுமென்றே நிறுவப்படும் சில ஆபத்தான பைத்தான் நிரல்களால் கணினியில் இருக்கும் தரவுகள் அழிக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இவை அனைத்தையும் தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காகத்தான் நாம் வேர்ச்சுவல் என்விரான்மென்ட் என அழைக்கப்படும் மெய்நிகர் கணினி சூழல்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. முதலில் இவற்றை நிறுவுவதற்கான செயல்முறைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே உங்களுக்கு தேவையில்லாத பட்சத்தில் இத்தகைய மெய்நிகர் கணினி சூழல்களை நிறுவ வேண்டிய தேவை கிடையாது. மேலும் இத்தகைய மெய்நிகர் கணினி சூழல்களிலும் பல்வேறு வகைகள் காணப்படுகிறது. உங்கள் கணினியில் எந்த அளவிற்கு இடவசதி இருக்கிறதோ அதற்கு ஏற்ற வகையிலான மெய் நிகர் சூழல்களின் நிறுவனம். என்னுடைய கணினியில் 30GB அளவுக்கு குறைவான இட வசதி தான் இருக்கிறது. மேலும் நான் சில குறிப்பிட்ட வகையிலான நூலகங்களை மட்டும் பயன்படுத்துவதால் என்னுடைய கணினியில் நான் conda எனும் மெய்நிகர் சூழலை பயன்படுத்துகிறேன்.
முதலில் Sudo apt update என கொடுப்பதன் மூலம், ஏற்கனவே லினக்ஸ் கணினியில் இருக்கக்கூடிய பைல்கள் அனைத்தும் ஒரு முறை அப்டேட் ஆகும்.
wget repo.anaconda.com/miniconda/Miniconda3-latest-Linux-x86_64.sh என்ற கட்டளை மூலம் miniconda வுக்கான Bash script ஐ பெற முடியும்.
bash Miniconda3-latest-Linux-x86_64.sh
என்ற கட்டளை மூலம் bash script ஐ இயக்கி வேலையை தொடங்கலாம். விதிமுறைகளை enter கொடுத்து, இறுதியில் yes என type செய்யவேண்டும்.
இதன் மூலம் ஒவ்வொரு முறையும் conda தானாகவே செயல்படும்.
source ~/.bashrc
இந்த கட்டளை மூலம் உங்கள் shell ஐ restart செய்யவும்.
conda –version
அவ்வளவு தான், conda version 3.10 என காட்டும். வேலை முடிந்தது.
Conda –deactivate
இதன் மூலம் conda வை தேவை இல்லாத நேரம் deactivate செய்யலாம்.
இனிமேல் எப்போவும் உங்கள் முனையத்தில் (base) username என்பது போல தான் இருக்கும்.
Automatic conda activation ஐ off செய்ய விரும்பினால், கீழே உள்ள கட்டளை உதவும்.
conda config –set auto_activate_base false
தொடர்ந்து conda பதிப்புகளை புதுப்பிக்க,
Conda update conda என்கிற கட்டளையை பயன்படுத்தவும்.
conda create –name kaniyam என கொடுப்பதன் மூலம், conda வில் kaniyam எனும் virtual environment உருவாக்க படுகிறது.
conda create –name data_kaniyam python=3.9 pandas numpy matplotlib
என கொடுப்பதன் மூலம், data_kaniyam எனும் environment உடன் சேர்த்து, python=3.9,pandas,numpy,matplotlib போன்ற தொகுப்புகளும் நிறுவ படும்.
மற்றபடி ஒரு பைத்தான் தொகுப்பை(package) நிறுவ,
Conda install package_name என்பதை பயன்படுத்தலாம்.
Conda env list என கொடுப்பதன் மூலம், conda மூலம் நிறுவப்பட்ட environment களின் பட்டியல் காட்டப்படும்.
conda env export > environment.yml என கொடுப்பதன் மூலம், உங்கள் virtual environment தரவுகளை yml file ஆக பகிர முடியும்.
conda env create -f environment.yml என்பதன் மூலம், பெறப்பட்ட yml file ஐ இயக்க, நிர்வகிக்க முடியும்.
இது linux mint xfce இல் சிறப்பாக செயல்படுகிறது. வெளியீட்டுக்கு(Distro) ஏற்ப சில மாற்றங்கள் இருக்கலாம்.
தொடர்ந்து கற்போம்.
அன்புடன்,
ஶ்ரீ காளீஸ்வரர் செ,
அறிவியல் எழுத்தாளர்,
முதுகலை இயற்பியல் மாணவர்,
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,
நாகர்கோவில் -03
[email protected]
#environments #linux #virtualEnvironments