They are doing it in the Indian capital during #DonaldTrumpIndiaVisit, when international media attention is on India.

Now imagine what they're doing in Kashmir under internet shut down. #DelhiBurning

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

http://bit.ly/2T7nRzy

#NarendraModi #DonaldTrumpIndiaVisit #DonaldJTrump

‘ட்ரம்ப் வருகைக்காக இந்தியாவே காத்திருக்கிறது’ - பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.05 மணி அளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். நாளையும் ட்ரம்ப் இந்தியாவில் தங்கி அரசு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். India awaits your arrival @POTUS @realDonaldTrump! Your visit is definitely going to further strengthen the friendship between our nations. See you very soon in Ahmedabad. https://t.co/dNPInPg03i — Narendra Modi (@narendramodi) February 24, 2020 அதனை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ''உங்களுக்காக இந்தியாவே காத்திருக்கிறது. ட்ரம்பின் வருகையால் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும். விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். 'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்புவதற்கு பெருமை படுகிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

http://bit.ly/2uYLPoB

#DonaldTrumpIndiaVisit #IvankaTrump

“மீண்டும் இந்தியா திரும்புவதற்கு பெருமை படுகிறேன்” - இவான்கா ட்ரம்ப்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்புவதற்கு பெருமை படுகிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இவான்கா ட்ரம்ப் கலந்து கொண்டார். அப்போது மோடியின் சாதனை அசாதாரணமானது என புகழ்ந்தார். மேலும், மாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு கண்காட்சிகளை மோடியும் இவான்காவும் பார்வையிட்டனர். 'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்! இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அஹமதாபாத்தில் மோட்டேரா மைதானத்தில் பிரமண்டமாய் நடைபெற உள்ள “நமஸ்தே ட்ரம்ப்“ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதன்பின் மாலை 4.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட உள்ளார். டொனல்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தாஜ்மஹாலை சுமார் 30 நிமிடங்கள் பார்வையிட உள்ளனர். ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் நேரத்தில், இவான்கா இரண்டாவது முறையாக இந்தியா வரவுள்ளார். Two years after joining @narendramodi at the Global Entrepreneurial Summit in Hyderabad, I am honored to return to India with @POTUS and @FLOTUS to celebrate that the grand friendship between the world’s two largest democracies has never been stronger! ?? ?? pic.twitter.com/r1d5fl9mtq — Ivanka Trump (@IvankaTrump) February 23, 2020 இந்தியா வருகை குறித்து ட்ரம்பின் மகள் இவான்கா தனது ட்விட்டரில், “ஹைதராபாத்தில் நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஒற்றுமையாக இருப்பதை கொண்டாடுவதற்கு எனது குடும்பத்தினருடன் மீண்டும் இந்தியா திரும்புவதில் பெருமை படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  ட்ரம்பின் குஜராத் பயணத்திற்கு மட்டும் இத்தனை கோடிகள் செலவா?

ட்ரம்ப் இந்தியா வருகை: இன்றைய சுற்றுப்பயண விவரம்! #DonaldTrumpIndiaVisit #Ahmedabad

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தங்க ஐடிசி மவுர்யா ஓட்டல் தயார் நிலையில் உள்ளது

http://bit.ly/2STt3YX

#DonaldTrumpIndiaVisit #ITCMaurya

ட்ரம்பிற்காக இவ்வளவு வசதிகளா? - ராஜபோக அம்சங்களுடன் தயார் நிலையில் இருக்கும் சாணக்யா அறை!

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தங்க ஐடிசி மவுர்யா ஓட்டல் தயார் நிலையில் உள்ளது இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கவுள்ள ஓட்டல் அவருக்காக தயார் நிலையில் உள்ளது. டெல்லி வரும் மிக முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் ஓட்டல் ஐடிசி மவுர்யா. இதே ஓட்டலில் தான் ட்ரம்பும் தங்க உள்ளார். அதி முக்கிய தேச தலைவர்களுக்கென்றே சாணக்யா என்ற பெயரில் இரு படுக்கை அறை கொண்ட அதிசொகுசு விடுதி இங்கு உள்ளது. பிரசிடென்ஷியல் சூட் எனப்படும் இந்த சாணக்யா அறையில் ஏற்கனவே இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் தங்கியிருந்தனர். உணவை சோதிக்கும் மைக்ரோபயாலஜி ஆய்வுக் கூடம், உடற் பயிற்சிக் கூடம், கண் கவரும் கலைப் பொருட்கள், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் என இந்த அறையின் வசதிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.சர்வதேச சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த விதிகளுக்கு உட்பட்டு இங்குள்ள காற்றின் தரம் பராமரிக்கப்படுகிறது. இத்தனை வசதிகள் கொண்ட சாணக்யா அறையின் ஒரு நாள் கட்டணம் 8 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தங்குகிறார் என்பதால் பாதுகாப்பு கருதி அவர் மற்றும் அவருடன் வருபவர்களுக்கு மட்டுமே இங்குள்ள அனைத்து அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்

‘நியூஸ் 360’: இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர்

பொருளாதார உறவை வலுப்படுத்துவாரா?

பொருளாதார முரண்பாடுகளை களைவாரா?

இன்று காலை 10.00 மணிக்கு...

காணத்தவறாதீர்கள்...| #DonaldTrumpIndiaVisit
#News360 #WelcomeTrump

ட்ரம்பின் இந்திய சுற்றுப்பயண விவரம்: சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை

http://bit.ly/39Z8boA

#DonaldTrumpIndiaVisit #Ahmedabad #SabarmatiAshram

சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்

    இந்தியா வரும் அமெரிக்க அதிபர் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லி நகரங்களுக்கு செல்கிறார். இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.   மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.05 மணி அளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 3.30 மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்படும் ட்ரம்ப், 4.45 மணிக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்றடைகிறார். அங்கு தாஜ்மஹாலை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாஜ்மஹாலை கண்டுகளித்த பின் அங்கிருந்து புறப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இரவு 7.30 மணிக்கு டெ‌ல்லி சென்றடைகிறார். அங்கு தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கும் அதிபருக்கு, நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.

#TopNews | அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை; இந்தியா படுதோல்வி...

முக்கியச் செய்திகள் சில...!

http://bit.ly/3c1a1Hx

#Headlines #DonaldTrumpIndiaVisit #indvsnz

TopNews | அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை; இந்தியா படுதோல்வி.. முக்கியச் செய்திகள்!

இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு ட்ரம்ப் மனைவி மெலனியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்கலாம். சர்ச்சை எழுந்த நிலையில், அமெரிக்க தூதரகம் விளக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின் போது திடீர் வன்முறை. கல்வீசி இருதரப்பினர் தாக்குதல். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் புதுமையான பொக்கிஷமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் வரிகளை சுட்டிக்காட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச்சு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 14 துப்பாக்கிக் குண்டுகள் கேரள மாநிலம் கொல்லத்தில் கண்டுபிடிப்பு. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி. 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அபாரம்.