
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார்....
www.patrikai.com
கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழா
திருச்சி: சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார் பின்னர் அங்கு கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 5.05 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29ஆம் அன்று நடைபெற இருக்கின்றது. இரண்டு வருடங்களுக்குப்...
www.patrikai.com
தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்பினார்….
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் மலையில் இருந்து மதுரை நகருக்குள் தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், தனது பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை அழகர் மலைக்கு திரும்பினார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி இருவர்கள் மரணம் அடைந்ததைத் தவிர எந்த அசம்பாவிதமும் இன்றி, சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த 14ஆம் தேதி...
www.patrikai.com
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சை: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த...
www.patrikai.com
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 6ஆயிரம் சிறப்பு பஸ்கள் – 9 பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்ற காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தமிழகஅரசு அனுமதி மறுத்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் எப்போதும்போல சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி...
www.patrikai.com
2ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுரண்மி கிரிவலம்! பக்தர்களுக்கான வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி உள்பட பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கப்பட்டதுடன், கடந்த மாதம் பவுர்ணமி முதல் பக்தர்கள்...
www.patrikai.com
2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…
மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப்புகழ்பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் 12நாட்கள் சித்திரைப்பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையா நடைபெற்று வந்த நிலையில்,...
www.patrikai.com
இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா தொடக்கம்
தஞ்சாவூர் இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் காலை 6 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டும் சித்திரை பெருவிழா இன்று காலை தொடங்கியது. முன்னதாக சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு நாளை 31ம் தேதி காலை பல்லக்கு...
www.patrikai.com