கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வர மறுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஎன்பிஆர் விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
NPR issue: DMK, congress mlas walk out from tn Assembly led by Stalin
இன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்! சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Debate on subsidy claims from today! TN Assembly session started….
7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
தமிழக பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி...!
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் - ஓபிஎஸ் |
http://bit.ly/2Sp3kqM
#TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
சேலத்தில் புதிய சிப்காட்; மாமல்லபுரத்தை மேம்படுத்த திட்டம்; பட்ஜெட் அம்சங்கள்..!
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத் தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு.
அனைத்து காலநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு வீடுகள் உள்ளிட்ட வசதிகள் அடங்கிய சிறப்புத் திட்டம்.
2019-20-ல் மதிப்பிடப்பட்ட ரூ.14,314 கோடி வருவாய் பற்றாக்குறை, திருத்த மதிப்பீட்டில் ரூ.25,071 கோடியாக உயர்வு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.
குடியிருப்பு வாடகை ஒப்பந்தங்களுக்கு முத்திரைத் தாளுக்கான வரி 1%ல் இருந்து 0.25% வரை குறைப்பு.
மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.563 கோடியில் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
தமிழகத்தின் கடன் தொகை... பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல்
சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5%ஆக உயர்த்தப்படும்.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், கடன் உத்தரவாத நிதிக்குழும திட்டத்தின்கீழ் வட்டி மானியம் உயர்வு.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தம்.
ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும்.
அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். நிர்பயா நிதியின்கீழ் பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா.
அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை. அம்மா உணவகத் திட்டத்தை செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு
ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://bit.ly/2SP8oEa
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
தமிழகத்தின் கடன் தொகை... பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல்
2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, “உயர் கல்வித்துறையை பொருத்தவரை 2019-2020-ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு ரூ.4,584.21 கோடியாக இருந்தது. ஆனால் 2020-2021-ஆம் ஆண்டு அதன் மதிப்பீடு ரூ. 5,050.84 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டித் திட்டத்தை எதிர்நோக்கும் பள்ளிக் குழந்தைகள் - அமல்படுத்துமா தமிழக அரசு?
தமிழக அரசின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு 4.023%லிருந்து சிறிது உயர்ந்து 4.189%ஆக உள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை வைக்கும் அருங்காட்சியகத்திற்கு ரூ. 12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் 2,19,375 கோடி. செலவு 2,41,601 கோடி. பற்றாக்குறை 22,226 கோடியாக உள்ளது.
2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
10-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம்
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
http://bit.ly/2UMWywN
| #TNBudget2020 | #BudgetSession2020 | #OPS
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2020-2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ சிறைத்துறைக்கு ரூ. 329.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு ரூ. 8,876.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,997 விசைப்படகுகளில் ரூ. 18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 500 கோடியும், மின்சாரத்துறைக்கு ரூ. 20,115.58 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பட்ஜெட் 2020: தமிழக மக்களுக்கு கிடைப்பது என்ன? #PTLiveUpdates