
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு – ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு…
சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அன்று, ஓபிஎஸ் தனது ஆதரவளர்களுடன் வந்து அதிமுக தலைமை அலுவலக அறைகளின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அவணங்களை அள்ளிச்சென்றால். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அதிமுக அலுவலக கலவரதின்போது திருடப்பட்ட 113 ஆவணங்களை மீட்டுள்ளதுடன், இதுதொடர்பாக ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக எடப்பாடிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து வானகரத்தில்...
www.patrikai.com
அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவைம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் செப்டம்பர் 7ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு...
www.patrikai.com
ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி: அதிமுக தலைமைஅலுவலகம் சாவி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…
டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுiவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்த நிலையில், தற்போது மேலும் அடி விழுந்துள்ளது. ஜூன் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது, ஓபிஎஸ்...
www.patrikai.com
53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு
சென்னை: "அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு 53 நாட்களாகிறது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு சுமத்திaதுடன், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் தெரிவித்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார் . இந்த...
www.patrikai.com
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல் உள்பட பல பொருட்கள் திருட்டு! அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்ததால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகஅரசு அதிமுக...
www.patrikai.com
சீல் அகற்றம்; ஓபிஎஸ் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட அதிமுக அலுவலகம் – புகைப்படங்கள்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்ட நிலையில், உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர் கடந்த 11ந்தேதி புகுந்து சூறையாடியுள்ள அலங்கோல காட்சிகளை கண்டு மனம் நொந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம்...
www.patrikai.com
அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: 400 பேர் மீது வழக்கு பதிவு…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், எடப்பாடி ஆதரவாளர்கள் 22 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பு இடையே நேற்று நடந்த மோதலில் 2 போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர்...
www.patrikai.com
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழகஅரசு ‘சீல்’: நீதிமன்றத்தில் முறையீடு!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு அவசர முறையீடு செய்தது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்து, அங்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றார்....
www.patrikai.com